அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தாா்.
அம்மாபேட்டை
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி திடீரென ஆய்வு செய்தார். அப்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் எத்தனை இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கும் இடமான உமாரெட்டியூர் பிரிவு பகுதியை பார்ைவயிட்டார். சாலை விபத்துகள் ஏற்படாதவாறு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு வரும் புகார்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் முரளி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.