அம்மாபேட்டையில் கஞ்சா விற்றவர் கைதுமற்றொருவருக்கு வலைவீச்சு
அம்மாபேட்டையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டாா்
ஈரோடு
அம்மாபேட்டை மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து அதில் ஒருவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்துக்கொண்டு இருந்தபோது மற்றொருவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து பிடிபட்டவரிடம் விசாரித்ததில் அவர், மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பதும், அவர் அங்கு நின்றுகொண்டு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கதிர்வேலை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கேசரிமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story