அந்தியூர் பகுதியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

அந்தியூர் பகுதியில்  கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை;  மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு
x

அந்தியூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார்.

ஈரோடு

அந்தியூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார்.

கனமழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் அந்தியூர் பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்படுவதால் அந்தியூர் பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை

இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்கள், நடுநிலை பள்ளிக்கூடங்கள், உயர்நிலை பள்ளிக்கூடங்கள், மேல்நிலை பள்ளிக்கூடங்கள் மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story