அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை


அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
x

அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், எண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை ரூ.90 முதல் ரூ.120 வரையும், பீடா வெற்றிலை ரூ.40 முதல் ரூ.60 வரையும், செங்காம்பு ெவற்றிலை ஒரு கட்டு ரூ.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கு வெற்றிலை விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை, மேட்டூர், தர்மபுரி பகுதி வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச்சென்றனர்.


Related Tags :
Next Story