நாசரேத்தில் முன்விரோதத்தில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு: 2 பேர் சிக்கினர்
நாசரேத்தில் முன்விரோதத்தில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரித்தவழக்கில் சிறுவன் உள்பட இரண்டுபேரைபோலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத்தில் வாலிபரின் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
நாசரேத் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் சாமுவேல் மகன் பிரைட் இம்மானுவேல் (வயது 20). இவருக்கும், நாசரேத் 2-வது தெருவைச் சேர்ந்த மேசாக் ராஜாசிங் மகன் பாஸ்கர் (20) என்பவருக்கும் கடந்த 24-ந் ்தேதி பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் பிரைட் இம்மானுவேல் தனது மோட்டார் சைக்கிளை கோவில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் எரிப்பு
அப்போது அங்கு வந்த பாஸ்கர், மற்றும் அவரது நண்பர் ஜெயபாண்டியன் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் பிரைட் இம்மானுவேலின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
2 பேர் சிக்கினர்
இது குறித்து பிரைட் இம்மானுவேல் அளித்த புகாரின் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்கு பதிவு செய்து பாஸ்கர் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தார்.