ஏரல் பேரூராட்சியில்தூய்மை பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு


ஏரல் பேரூராட்சியில்தூய்மை பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் பேரூராட்சியில் தூய்மை பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ம.சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் நா.தனசிங், இளைநிலை உதவியாளர் வ.ஜமுனா, சுகாதார மேற்பார்வையாளர் சி.அடைக்கலம், ஏரல் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தர்மராஜ், பொருளாளர் ஆ. அருணாசலம், செயலாளர்கள் ரா.மணிவண்ணன், பெ.சுந்தர், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story