பவானி ஆற்றில்கழிவுநீரை கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க. மனு


பவானி ஆற்றில்கழிவுநீரை கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க. மனு
x

பவானி ஆற்றில் கழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு

பவானி ஆற்றில் கழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.

பவானி ஆற்றில்...

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.ராஜா தலைமையில், தலைவர் மாரிமுத்து, பொருளாளர் ஜெயலட்சுமி, இளைஞர் அணி செயலாளர் ஜான் சார்லஸ் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. பில்லூர் அணை வரை பவானிசாகர் அணை நீர் சுத்தமாக வருகிறது. தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலை கடந்த பின்னர் தான் நீர் மாசடைகிறது. தேக்கம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனங்கள், சாய ஆலைகள் மற்றும் தனியார் நூல் மில்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே பவானி ஆற்றில் கலக்கிறது. மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சி கழிவுநீர் சிறுமுகை பேரூராட்சி மற்றும் கூத்தம்பூண்டி, பெத்திக்குட்டை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக பவானி ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

கடும் நடவடிக்கை

ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1 கோடியே 5 லட்சம் பொதுமக்கள், பவானிசாகர் அணையின் நீரை நம்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பவானிசாகர் அணை 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கழிவு நீர் பவானிசாகர் அணையில் வந்து தேக்கமடைகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கும்போது கருப்பு நிறத்தில் வெளியேறுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களாக மீன்களும் செத்து மிதக்கின்றன. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு தோல் அரிப்பு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனை கவனத்தில் கொண்டு கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அப்போது அவர்களுடன், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஷேக்முகைதீன், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ராஜ், தலைவர் பிரபு, மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம் உள்பட பலர் இருந்தனர்.


Next Story