பவானியில் நாடார் மகாஜன சங்க பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழாகாமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை


பவானியில் நாடார் மகாஜன சங்க பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழாகாமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை
x

கல்வி ஊக்கத்தொகை

ஈரோடு

பவானியில் நாடார் மகாஜன சங்க பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழாவும், காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

பாராட்டு விழா

பவானி வட்டார நாடார் சங்கம் சார்பில் நாடார் மகாஜன சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவும் பவானி காலிங்கராயன் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பவானி வட்டார நாடார் சங்கத்தின் தலைவர் வி.பழனிசாமி தலைமை தாங்கினார். காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் ஜீவா சித்தையன், அறக்கட்டளையின் செயலாளர் பி.கந்தசாமி நாடார், என்.கே.கருப்பணன், பழவிளை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், டாக்டர் செந்தில்குமார், ஜி.ராஜா, பாலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், 'கடந்த 150 வருடங்களாக நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக முன்னோடிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதால் இதனை கட்டிக்காப்பது நமது பெருமையாகும்.

முன்னேற்றம்

அன்று கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நாம் பொருட்களை எடுத்துக் கொடுத்தோம். ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்து வந்து நம்மிடம் பெற்று செல்கிறார்கள். இதுதான் முன்னேற்றம்.

பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அவர்கள் வழிகாட்டிகளாக மாற வேண்டும்.

பவானியில் வட்டார அளவிலான இந்த சங்கத்தின் மூலம் காமராஜர் அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.50 லட்சம் மதிப்பில் இடம் வாங்கி இருப்பது மகிழ்ச்சி. மேலும் ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்குவது இரட்டை மகிழ்ச்சி' என்றார்.

வாழ்த்து

விழாவில் கார்த்திகா கரிக்கோல் ராஜ், கரூர் மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் ஈரோடு வரதராஜ், நாமக்கல் செந்தில்குமார், சேலம் எழில், குமார், தர்மபுரி ரவி, கிருஷ்ணகிரி வெங்கடேசன், திருப்பூர் லதா, கோவை தயாநிதி, கரூர் துரைசாமி, நீலகிரி குப்புசாமி, ஈரோடு மாநகர செயலாளர் சின்னத்தம்பி, திருப்பூர் இளங்கோ, கோவை விஜயகுமார், உள்பட அனைத்து மாவட்ட, மாநகர செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர் சின்னச்சாமி, ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் சதாசிவம், முருகன், பாலாஜி செல்வம், ராஜன், பந்தல் மூர்த்தி, நாடராஜன் திருநீல கண்டன், மாரிமுத்து, தேவராஜ், ராமச்சந்திரன், ராசப்பன், ரதீஷ்குமார் பூங்கொடி செல்வராஜ், மகுடபதி, சின்னையன், பரமேஸ்வரன், நசியனூர் செந்தில் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டார்கள். முன்னதாக அனைவரையும் பவானி வட்டார நாடார் சங்கத்தின் செயலாளர் நல்லசிவம் வரவேற்றார். முடிவில் ராமன் நன்றி கூறினார்.


Next Story