பவானியில்இம்முடி கெட்டி முதலியார் பிறந்தநாள் விழா


பவானியில்இம்முடி கெட்டி முதலியார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 24 Jan 2023 1:00 AM IST (Updated: 24 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாள் விழா

ஈரோடு

கொங்கு நாட்டில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசரும், பவானி சங்கமேஸ்வரர் கோவிலை கட்டிய மாமன்னர் இம்முடி கெட்டி முதலியார். இவருடைய பிறந்தநாளான தை அமாவாசை திருவோணம் நட்சத்திரம் அன்று கெட்டி முதலியார் பேரவை சார்பில், பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பூஜைகள் செய்தும் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் பவானி சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதைத்தொடர்ந்து உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி இருக்கவும், சந்தோசமாக வாழவும் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா எம்.ஆசைத்தம்பி வெள்ளித் தேர் இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் கெட்டி முதலியார் பேரவை தலைவர் நாகேஷ்வரன், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகானந்தபதி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வைரம், இளைஞர் அணி அமைப்பாளர் பிரதாப், துணை அமைப்பாளர் விக்ரம் மற்றும் வெண்டிபாளையம் கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், கெட்டி முதலியார் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story