கரூாில், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
கரூாில், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரசார் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலை கைவிட்டு காங்கிரசார் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story