செக் மோசடி வழக்கில் வியாபாரிக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறைத்தண்டனை
செக் மோசடி வழக்கில் வியாபாரிக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு கோர்ட்டு நீதிபதி தீர்ப்ப கூறினார்.
கோவில்பட்டி:
செக் மோசடி வழக்கில் வியாபாரிக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயி
கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கீழத் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் காசிராஜன் (வயது 59). விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த உளுந்து, மக்காச்சோளத்தை புது அப்பனேரியை சேர்ந்த ஜீ. முனிஸ்வரன் (50) என்ற வியாபாரியிடம், கடந்த 2020 ஜூன் 8-ந் தேதி முதல் ஜூலை 29-ந் தேதி வரை ரூ.10 லட்சத்து 13 ஆயிரத்து 460-க்கு விற்பனை செய்துள்ளார்.
இதற்காக வியாபாரி முனீஸ்வரன், காசிராஜன் வங்கிக் கணக்கில் ஜூலை 24-ந்தேதி முதல் அக்.16-ந் தேதி வரை ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்தை செலுத்தினார்.
செக்மோசடி
காசிராஜனுக்கு செலுத்த வேண்டிய மீதி தொகையான ரூ.1 லட்சத்திற்கு அக். 8ந் தேதியிட்ட காசோலையை முனீஸ்வரன் வழங்கினார். அந்த காசோலையை காசிராஜன் அக். 17-ந் தேதி முதல் 6 தடவையாக வங்கியில் பணம் பெறுவதற்காக செலுத்திய போது, பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துள்ளது.
இந்த செக்மோசடி தொடர்பாக முனீஸ்வரன் மீது செக் காசிராஜன் கோவில்பட்டி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
6 மாதம் சிறை
இவ்வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ. முகமது சாதிக் உசேன், செக் மோசடி செய்த வியாபாரி முனீஸ்வரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.