வீடுபுகுந்து கொள்ளை வழக்கில்2ஆண்டுகளாகதலைமறைவாகஇருந்த மேலும் 2 பேர் சிக்கினர
ல்'ட'வீடுபுகுந்து கொள்ளை வழக்கில் 2ஆண்டுகளாகதலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் சிக்கினர
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் நிதிநிறுவன உரிமையாளர் வீடுபுகுந்து ரூ.5 லட்சம் பணம், 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மேலும் இரண்டு வாலிபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வீடுபுகுந்து கொள்ளை
தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பவன். இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தட்டார் மடத்தில் உள்ள மரிய விசுவாசம் மகள் சகாய சுஷ்மிதா என்பவர் வீட்டில் வாடைக்காக குடி இருந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மரிய விசுவாசம் மகள் சகாய சுஷ்மிதா என்பவர் வீட்டை காலி செய்து தரும்படி கூறினார். இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் பவான் வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற வேலையில் மரிய விசுவாசம் மகள் சகாய சுஷ்மிதா, அவரது மனைவி அந்தோணி ஜான்சி ராணி, காடாட்சபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜெகன், கந்தையா மகன் கருப்பசாமி, முனியாண்டி மகன் சுயம்புலிங்கம், சுடலை ஆண்டி மகன் முருகன், கனகராஜ் மகன் பெர்லின் ஆகியோர் பவன் வீடுபுகுந்து பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 50 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மேலும் 2 பேர் சிக்கினர்
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குபதிவு செய்துசகாய சுஷ்மிதா, அந்தோணி ஜான்சி ராணி, ஜெகன், கருப்பசாமி, சுயம்புலிங்கம் ஆகியோரை கைது ெசயது கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் கடாட்சபுரத்தைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் முருகன், கனகராஜ் மகன் பெர்லின் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் தட்டார்மடம் போலீசார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முருகன், பெர்லின் ஆகியோரை கைது செய்தனர்.