கொலை வழக்கில்கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்


கொலை வழக்கில்கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே கொலை வழக்கில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்.

தூத்துக்குடி

தட்டார்மடம் :

தட்டார்மடம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்த ஹரிராமன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய உறவினர் செய்துங்கநல்லூர் தென்னந்தோழை தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் கணேசன் (55) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு கணேசன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் கிறிஸ்துராஜ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கணேசனை தேடி வந்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த கணேசனை தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story