சாத்தூரில் கொலை வழக்கில் மனைவி, திருநங்கை உள்பட 4 பேர் கைது


சாத்தூரில் கொலை வழக்கில் மனைவி, திருநங்கை உள்பட 4 பேர் கைது
x

சாத்தூர் அருகே தொழிலாளியின் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி, திருநங்கை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் அருகே தொழிலாளியின் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி, திருநங்கை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூலித்தொழிலாளி

சாத்தூர் தாலுகாவில் உள்ள சிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 61). இவரது மகன் ராஜா என்கிற கற்பகராஜா (28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகள் ராஜலட்சுமி (25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விதர்ஷனா, லட்சுமி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா மரம் வெட்டும் கூலி தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள ராஜா அவ்வப்போது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவி ராஜலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தகராறு செய்துள்ளார்.

மர்ம சாவு

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜா தனது மாமியார் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். அவரது காது அருகில் ரத்தம் வழிந்துள்ளது. சேலையால் இறுக்கிய தடம் கழுத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜாவின் தந்தை மகாலிங்கம் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ராஜாவின் மனைவி ராஜலட்சுமி, மாமியார் பழனியம்மாள் (48), சிவகாசி சித்து ராஜபுரத்தை சேர்ந்த திருநங்கை ஸ்வீட்டி (25), வேலாயுதம் (25) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்த கணவனை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ராஜலட்சுமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story