சென்னிமலையில் திருவள்ளுவர் உருவ சிலைக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை


சென்னிமலையில் திருவள்ளுவர் உருவ சிலைக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை
x

சென்னிமலையில் திருவள்ளுவர் உருவ சிலைக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஈரோடு

சென்னிமலை

திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று சென்னிமலை பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் (மேற்கு), சி.பிரபு (கிழக்கு) மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.


Next Story