சென்னிமலையில் தியாகி குமரனுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் ஆய்வு அமைச்சர்கள் பார்வையிட்டனர்


சென்னிமலையில்   தியாகி குமரனுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் ஆய்வு  அமைச்சர்கள் பார்வையிட்டனர்
x

நினைவு மண்டபம் கட்ட இடம்

ஈரோடு

கொடிகாத்த குமரன் எனப்படும் தியாகி குமரன் சென்னிமலையில் பிறந்து சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு திருப்பூரில் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு இறந்தார். தியாகி குமரனுக்கு சென்னிமலையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆய்வு செய்ய வந்தனர்.

தியாகி குமரனுக்கு நினைவு மண்டபம் கட்ட சென்னிமலை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை, காங்கேயம் ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகில் மற்றும் மேலப்பாளையம் 3 ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கூறுகையில், தியாகி குமரனை பெருமைப்படுத்தும் வகையில் சென்னிமலையில் திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வதற்காக இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் சி.பிரபு, நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, பெருந்துறை தாசில்தார் குமரேசன், ஈரோடு செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



---

Image1 File Name : 11849701.jpg

----


Next Story