சின்னமனூரில் அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு


சின்னமனூரில்  அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
x

சின்னமனூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்

தேனி

சின்னமனூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவிகள் எண்ணிக்கை, அவர்களுக்கான உணவின் தரம், உணவுப் பொருட்கள் இருப்பு, பணியாளர்கள் வருகை பதிவேடு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகள் மற்றும் விடுதியின் செயல்பாடு குறித்து மாணவிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வின் போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா உடனிருந்தார்.


Next Story