கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய கடன்தாரர்களுக்குவட்டி தள்ளுபடி 6 மாதம் நீட்டிப்பு
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய கடன்தாரர்களுக்கு வட்டி தள்ளுபடி 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தவணை தவறிய கடன்தாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை காலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நெல்லை மண்டல வீட்டுவசதி துணைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடன் தீர்வு திட்டம்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்களுக்கு தமிழக அரசு ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி செலுத்தும் பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
நீட்டிப்பு
இந்த வட்டி தள்ளுபடி சலுகை காலம் 3.3.23-ல் இருந்து 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த 6 மாதங்கள் மட்டுமே இந்த திட்டம் அமலில் இருக்கும். அதன்பிறகு செயல்பாட்டில் இருக்காது என்று அரசு அறிவித்து உள்ளது. எனவே தவணை தவறிய அனைத்து உறுப்பினர்களும் இந்த சலுகையை பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியை மட்டும் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த சலுகை தொடர்பான விவரங்களுக்கு தொடர்புடைய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை நேரில் அணுக வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது