கடலூரில், காது குத்து நிகழ்ச்சிக்கு சீர் செய்வதில் இரு தரப்பினரிடையே மோதல் 10 பேர் மீது வழக்கு


கடலூரில், காது குத்து நிகழ்ச்சிக்கு சீர் செய்வதில் இரு தரப்பினரிடையே மோதல் 10 பேர் மீது வழக்கு
x

கடலூரில் காது குத்து நிகழ்ச்சிக்கு சீர் செய்வதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் புதுப்பாளையம் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜா மனைவி ஜமுனா (வயது 35). இவரும் ஆர்.சி.நகர் காலனியை சேர்ந்த சின்னதாய் என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் சின்னதாய் வீட்டு காது குத்து நிகழ்ச்சிக்கு ஜமுனா ½ பவுன் நகை சீர் செய்ய வேண்டியதை செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனால் சின்னதாய் தனது உறவினர்களிடம் அதை குறையாக சொல்லி உள்ளார். இதை அறிந்த ஜமுனா, அவரது தங்கை புவனாவும் சின்னதாய் வீட்டுக்கு சென்று, அவரிடம் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சின்னதாய், இமயவர்மன், அம்மு, ரம்யா, முருகன் ஆகிய 5 பேரும் புவனாவை செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பதிலுக்கு ஜமுனா, புவனா, பேபி, வசந்தி, வினோத் ஆகிய 5 பேரும் அம்முவை தாக்கி மிரட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் புவனா, அம்மு ஆகிய 2 பேரும காயமடைந்தனர். இது பற்றி அவர்கள் 2 பேரும் கடலூர் புதுநகர் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story