கூடலூர் பகுதியில் மொச்சை பயறு விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலூர் பகுதியில் மொச்சை பயறு அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
தேனி
கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய கழுதைமேடு புலம், சரித்திரேவு, பளியன்குடி, பெருமாள் கோவில் புலம், எள்கரடு, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் துவரை, தட்டைப்பயறு, மொச்சை,அவரை, ஆகிய பயிர் வகைகளை சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
விவசாயிகளும் களை பறித்து, மருந்து தெளித்து பயிர்களை நன்கு வளர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது மொச்சை செடிகளில் அதிகளவு பூக்கள் விடத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பிஞ்சுகள் உள்ளன. இந்த மாதம் இறுதியில் மொச்சைக்காய் சந்தைக்கு விற்பனைக்கு வரத்தொடங்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால் மொச்சை பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
Related Tags :
Next Story