தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடி கொடிநாள் வசூல் செய்ய இலக்கு


தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில்  ரூ.1½ கோடி கொடிநாள் வசூல் செய்ய இலக்கு
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 10:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடி கொடிநாள் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடி கொடிநாள் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கொடிநாள்

கடினமான பணிகளை செய்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொடிநாள் நிதி உருவாக்கப்பட்டு, ஆண்டு தோறும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரத்து 156 வசூல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இலக்கு

இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி கொடிநாள் வசூலை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தோர், போர் விதவையர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் கொடிநாள் வசூல் செய்ய ரூ.1 கோடியே 44 லட்சத்து 86 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் மட்டும் ரூ.10 லட்சத்து 49 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடினமான பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த இலக்கை தாண்டி கூடுதலான நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.தெய்வசிகாமணி மற்றும் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.


Next Story