டி.கல்லுப்பட்டி யூனியனில் 100 நாள் வேலை குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு


டி.கல்லுப்பட்டி யூனியனில் 100 நாள் வேலை குறித்து மாணிக்கம்      தாகூர் எம்.பி. ஆய்வு
x

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலையரங்கம் திறப்பு

மதுரை மாவட்டம் ரெட்ரப்பட்டி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.5 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டிருந்த கலையரங்கத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார். தொடர்ந்து எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து சிலார்பட்டி, சின்ன முத்துலிங்கபுரம், செங்குளம், ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பணிபுரியும் பெண்களிடம் வேலை குறித்து கேட்டறிந்தார்.

அகில இந்திய கட்சி

பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது, செந்தில் பாலாஜி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுவதற்கு முன்பு, தன்னுடைய முகத்தை ஒரு தடவை கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஹரியானாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திப் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அமைச்சரை நீதிமன்றம் கைது செய்ய கூறியும் அவர் அமைச்சராக வெளியில் சுற்றிக்கொண்டு உள்ளார். அவர் இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. செந்தில் பாலாஜி குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைத்து மதங்களையும் மதிக்கின்ற கட்சியாகும். இது ஒரு அகில இந்திய கட்சி. அனைத்து மதங்களுக்கும் உரிய மரியாதை கொடுப்போம். இவ்வாறு கூறினார். உடன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story