வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில்  பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்

தேனி

வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 51). இவர் வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் போடியை சேர்ந்தவர் கண்ணன் (35). இவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் அங்குள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story