மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள  ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

பிரதோஷ வழிபாடு

ஈரோடு

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கோபி

கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள மூன்று முக முகத்து வேலாயுத சாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இந்த கோவிலில் உள்ள 120 லிங்கம், 18 சித்தர்கள், சிவகுருநாதர், நந்தி மற்றும் ஸ்ரீ சக்கர நாயகி மகாமேருவுக்கு பால், தயிர், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கோபி, காசிபாளையம், சிங்கிரிபாளையம், கோபிபாளையம், அளுக்குளி, கரட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

இதேபோல் கோபி பச்சை மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரர், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சாமி கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், கோபி பாரியூர் அமரபனீஸ்வரர் கோவில், நஞ்சகவுண்டன் பாளையம் தன்னாசி அப்பன் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவில் உள்பட கோபி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

கொடுமுடி

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் போன்ற 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் மூலவருக்கும் 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

சிவகிரி

சிவகிரி தலையநல்லூரில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. இதில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர் மற்றும் பல்ேவறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் சிவகிரி வேலாயுத சாமி கோவிலில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்தியூர்- அம்மாபேட்டை

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்லீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடா்ந்து சாமிக்கு வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நந்தி வாகனத்தில் செல்லீஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. இதில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்து. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வர சுவாமி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நாகேஸ்வரர், அம்மன் ஆகியோர் நந்தி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story