திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அ.தி.மு.க. தொடக்க விழா
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என். கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து கட்சி கொடியையும் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் திவான்பாட்ஷா, வக்கீல் பிரிவு செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சத்திரம்
கன்னிவாடி அருகே உள்ள புதுச்சத்திரம் ஊராட்சியில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சி கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. இதற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அ.தி.மு.க.. அவை தலைவர் ஆர்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே. சுப்பிரமணி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், பொறுப்பாளர்கள் ராமர், கந்தசாமி, லட்சுமணன், சுகுமார், கணேஷ்மூர்த்தி, ஜெயராமன், தங்கவேல், ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குஜிலியம்பாறை
குஜிலியம்பாறையில் நடந்த விழாவிற்கு அ.தி.மு.க. குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், பாளையம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் கலந்துகொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதற்கு ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், அம்பிளிக்கை ஊராட்சி தலைவருமான என்.பி.நடராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் சிந்தலப்பட்டி, கீரனூர், மார்க்கம்பட்டி, மற்றும் பல ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிலக்கோட்டை
நிலக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அ.தி.மு.க. கட்சி ெகாடி ஏற்றப்பட்டது.
பின்னர் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவில் முன்னாள் எம்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.
விழாவில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, துணைத் தலைவர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், கிழக்கு ஒன்றிய அவை தலைவர் தவமணி, மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன், ஜேசுராஜ், சரவணகுமார், ஜெயலலிதா பேரவை நகர பொறுப்பாளர்கள் மோகன்ராஜ், முருகன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காட்டு ராசா, துணைச் செயலாளர் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.