திண்டிவனத்தில்மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதம்
திண்டிவனத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உதய நகர் அருகே கார் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் செல்வம். இவரது கடைக்கு பழுது பார்க்க வந்த ஒரு காரை செல்வம் நேற்று முன்தினம் இரவு தனது கடையின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவு திடீரென கடையின் அருகில் இருந்த கொடுக்காப்புளி மரம் ஒன்று முறிந்து கார் மற்றும், அருகில் ராம் என்பவர் நடத்தி வந்த பங்க் கடை மீதும் விழுந்தது. இதில் கார் மற்றும் பங்க் கடை சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story