திண்டிவனத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு


திண்டிவனத்தில்  தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் மரக்காணம் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாலமுருகன்(வயது 41). இவர் சென்னை அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி செல்போன் மூலம் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் உள்ளே சென்று ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story