ஏரலில் முஸ்லிம் வணிகர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்


ஏரலில்  முஸ்லிம் வணிகர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரலில் முஸ்லிம் வணிகர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் முஸ்லிம் வணிகர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. கூட்டத்தில் புதிய தலைவராக பாக்கர்அலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ஹாஜா முகைதீன், செயலாளராக சிந்தாகனி, துணை செயலாளராக அப்துல் காதர், பொருளாளராக அகமது தெளபிக், கவுரவ ஆலோசகர்களாக முஹம்மது நகிப், சாதிக் அலி, செயற்குழு உறுப்பினர்களாக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Next Story