ஈரோடு மாவட்டத்தில்தாசில்தார்கள் அதிரடி பணி இடமாற்றம்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணி இட மாற்றம் செய்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணி இட மாற்றம் செய்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
தாசில்தார்கள் பணி இட மாற்றம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்கள், சமூக பாதுகாப்பு திட்டம், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என்று பல்வேறு அலுவலக பொறுப்புகளில் இருந்த தாசில்தார்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மொடக்குறிச்சி-ஈரோடு
அதன் விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி தாலுகா தாசில்தாராக இருந்த பி.எம்.சண்முகசுந்தரம் அந்தியூர் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இங்கு பணியாற்றி வந்த எம்.இளஞ்செழியன் மொடக்குறிச்சி தாசில்தாராக மாற்றப்பட்டு இருக்கிறார்.
பவானி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.எஸ்.செந்தில்ராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இங்கு பணியாற்றி வந்த பி.ஜெயக்குமார் ஈரோடு தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெருந்துறை
ஈரோடு தாசில்தார் என்.பாலசுப்பிரமணியம் ஈரோடு கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த ச.பூபதி பெருந்துறை தாசில்தாராக பணி இட மாற்றம் பெற்றார்.
கோபி கோட்ட கலால் அதிகாரியாக உள்ள டி.வி.ரவிசங்கர் தாளவாடி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு பணியாற்றி வரும் வி.உமாமகேஸ்வரன் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி தாசில்தாராக (கல்வி உதவித்தொகை) பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த எம்.ஷீலா பணி ஓய்வு பெறுகிறார்.
சத்தியமங்கலம்
சந்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜி.அங்கமுத்து பணி இட மாற்றம் பெற்று ஈரோடு கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த கே.விஜயகுமார் கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) பொறுப்புக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த பொறுப்பில் இருந்த வே.வீரலட்சுமி பவானி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் எஸ்.தியாகராஜ் பவானி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு பணியாற்றி வரும் வி.ரவிச்சந்திரன் சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணி இடமாற்றம் பெற்றார்.
அந்தியூர்
ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பி.உத்திரசாமி பணி இடமாறுதல் பெற்று கோபி தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றும் எஸ்.ஆசியா கோபி கோட்ட கலால் அதிகாரியாக பணி மாறுதல் பெற்றார்.
அந்தியூர் தாசில்தார் என்.தாமோதரன் பணி இடமாறுதல் பெற்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் துணை மேலாளர் மற்றும் தனி தாசில்தார் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு பணியாற்றி வரும் நா.முத்துலட்சுமி மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார். மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அ.பரிமளாதேவி ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணி இடமாறுதல் பெற்று உள்ளார். கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தார் வி.சிவகாமி, கோபி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேற்கண்டவாறு ஈரோடு மாவட்ட தாசில்தார்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.