ஈரோடு கிழக்கு தொகுதியில்கூடுதல் பறக்கும்படை அமைப்பு


ஈரோடு கிழக்கு தொகுதியில்கூடுதல் பறக்கும்படை அமைப்பு
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதல் பறக்கும்படை அமைக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களை கவர்வதற்காக பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை வினியோகம் செய்வதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதலாக ஒரு பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை நேற்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை, மாவட்ட தேர்தல் அலுவலர் இலவச தொலைபேசி எண் 1800 425 0424, 0424 2256782, 0424 2267672, தேர்தல் நடத்தும் அலுவலர் இலவச எண் 1800 425 94890, பறக்கும்படை அதிகாரிகளின் செல்போன் எண் 7094488017, 7094488049, 7094488072 மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரின் செல்போன் எண் 7094488547, 7094488076, 7094488982, 7094488983 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


Next Story