ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கோ-கஜ பூஜை


ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில்  கும்பாபிஷேகத்தையொட்டி கோ-கஜ பூஜை
x

ஈஸ்வரன் கோவில்

ஈரோடு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று கோபூஜை மற்றும் கஜ பூஜை நடந்தது.

கும்பாபிஷேகம்

ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 8-ந் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று கோபூஜை மற்றும் கஜ பூஜை நடந்தது. இதற்காக பசு மாடு, குதிரை, ஒட்டகம், யானை அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோ மற்றும் கஜ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

யாக பூஜை

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், அன்று மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

மேலும் வருகிற 6-ந்தேதி காலை 9 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும், 7-ந்தேதி காலை 7 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாக பூஜையும், 8-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. அன்று காலை 10.35 மணிக்கு உடனமர் ஆருத்ர கபாலீஸ்வர சாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.


Next Story