என்.எல்.சி.க்கு ஆதரவாகவிவசாயிகளை தமிழக அரசு வஞ்சித்து வருகிறதுகடலூரில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.பேட்டி


என்.எல்.சி.க்கு ஆதரவாகவிவசாயிகளை தமிழக அரசு வஞ்சித்து வருகிறதுகடலூரில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.பேட்டி
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.க்கு ஆதரவாக விவசாயிகளை தமிழக அரசு வஞ்சித்து வருவதாக கடலூரில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

கடலூர்

வஞ்சித்து வருகிறது

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு இப்பகுதி மக்களை பற்றி கவலை இல்லை. சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. இந்த நிதி ஆண்டு ரூ.82 கோடி செலவு செய்துள்ளது. அதில் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.94 லட்சம் மட்டும் செலவு செய்துள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு கிள்ளி போட கூட மனம் இல்லை.

மறுவாழ்வு, மறுசீரமைப்பு என்ற சட்டம் உள்ளது. இந்த சட்டப்படி இந்த பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் வேண்டும். எங்களது கோரிக்கை விவசாயிகளிடம் பேசி முடிவு எடுக்க வேண்டும். பாரதீய ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எல்.சி.க்கு தி.மு.க. துணை போகிறது. என்.எல்.சி.க்கு ஆதரவாக விவசாயிகளை தமிழக அரசு வஞ்சித்து வருகிறது.

விவசாயிகளை பிரித்து விட்டார்கள்

போராடிய விவசாயிகளை கட்சி ரீதியாக தி.மு.க. விவசாயிகள், தி.மு.க.அல்லாத விவசாயிகள் என்று பிரித்து விட்டார்கள். அவர்களை என்.எல்.சி.க்கு ஆதரவாக பேச வைத்து விட்டார்கள். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இப்பகுதி விவசாயிகளுக்காக என்ன குரல் கொடுத்து இருக்கிறார். மத்திய அரசின் கவனத்திற்கு ஏன் இதை கொண்டு செல்லவில்லை. என்.எல்.சி.யால் கடலூர் மாவட்டம் மட்டும் அல்ல, அதை சுற்றியுள்ள மாவட்டமும் பாலைவனமாக மாறி விடும். நிலம்கொடுத்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை.

என்.எல்.சி. பிரச்சினையில் மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை பிரித்து துரோகம் செய்கிறார்கள். என்.எல்.சி.க்கு நிலம், வீடு வழங்க இருக்கிற விவசாயிகளை அழைத்து பேசி சம அளவு இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story