ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்மார்க்சிஸ்ட் ெலனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில், ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில், ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலை பிரிவில் இருந்து கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஆண்டிப்பட்டி தாலுகாவில் குடியிருக்க வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தாசில்தார் கந்தர்லால் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். இதையடுத்து தங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.