சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சித் துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் ஒப்பந்த தொழிலாளர் முறையை தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும். தற்போது 480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணியில் நிரந்தரமாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26 ஆயிரத்துக்கு குறையாமல் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் தொழிற்சங்க தலைவர் சந்திரன், கிராமத்து தூய்மை காவலர் சங்கச் செயலாளர் சக்திவேல், சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயராசு, சத்தி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஆர்.ஜமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சரவணகுமார், ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.