கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பானைகளை உடைத்து விவசாய சங்கத்தினர் போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பானைகளை உடைத்து விவசாய சங்கத்தினர் போராட்டம்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பானைகளை உடைத்து விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பானைகளை உடைத்து விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை ஒன்றியம் சமுத்திரம் கிராமத்தில் மேல் நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தரக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லவன் பாளையம் கிளை சார்பில் நடந்த போராட்டத்திற்கு கிளைத்தலைவர் கோதண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜின்னா, பாலமுருகன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் பலராமன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன பேசினர்.

சமுத்திரம் கிராமத்தில் இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதிதாக அமைத்து தர வேண்டும். ஊராட்சி நிதியை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 16 இலவச வீட்டு மனை பட்டாவை அரசு கணக்கில் ஏற்றிட வேண்டும். சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், பழைய கால்வாய்களை தூர்வார வேண்டும். கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். திருவண்ணாமலை நகர கழிவுநீர் ஓலையாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேலை மரங்களை அகற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் கொண்டு வந்த மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story