போலீஸ் நிலையம் முன்பு வார்டு உறுப்பினர், கணவருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு வார்டு பெண் உறுப்பினர், கணவருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலம், டிச.1-
கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு வார்டு பெண் உறுப்பினர், கணவருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுன்சிலர்
கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் ஜெயசித்ரா. இவரது கணவர் கோபிநாத். பள்ளக்கொல்லை ஏரிக்கால்வாயில் நூறு நாள் திட்டத்தின் கீழ் பாதை அமைக்கும் பணி வார்டு உறுப்பினர் மூலம் நடந்து வருகிறது,.
ஆனால் பாதை அமைக்கக்கூடாது என அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள 3 பேர் பணிகளை தடுத்த ஜெயசித்ரா மற்றும் அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் ஜெயசித்ராவும், அவரது கணவர் கோபிநாத்தும் கண்ணமங்கலம் போலீ் நிலையம் முன்பு நேற்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சமரசம்
போலீசார் தடுத்து சமரசம் செயது, மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எறிந்தனர். போலீஸ் விசாரணை நடத்தியபோது, 100 நாள் திட்ட பணியை கோபிநாத்தும், ஜெயசித்ராவும் செய்து வந்ததை அப்பகுதியைச் சேர்ந்த நபர்கள் தடுத்ததால் தீக்குளிக்க முயன்றத தெரியவந்தது. தொடர்ந்து கணணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஅண்ணாமலை ஆகியோர் கார்த்திகை தீபம் கழித்து சாலை அமைக்கும் பணி நடத்தலாம் என சமரசம் செய்தனர். தீக்குளிக்க முயன்ற ஜெயசித்ரா, கோபிநாத் இருவரையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.