கோபி கூட்டுறவு சங்கத்தில்ரூ.9½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.9½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது
ஈரோடு
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி கிலோ ரூ.56-க்கும், நேந்திரன் கிலோ ரூ.40-க்கும், ஏலம் போனது. பூவன் ஒரு தார் ரூ.650-க்கும், தேன் வாழை ரூ.720-க்கும், மொந்தன் ரூ.430-க்கும், ரொபஸ்டா ரூ.430-க்கும், ரஸ்தாலி ரூ.610-க்கும், செவ்வாழை ரூ.960-க்கும், பச்சைநாடன் ரூ.600-க்கும் ஏலம் போனது மொத்தம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாழைத்தார் விற்பனையானது. இதேபோல் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு தேங்காய் ரூ.7 முதல் ரூ.13.60 வரை ஏலம் போனது. மொத்தம் 5,740 தேங்காய் ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனையானது.
Related Tags :
Next Story