கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனா்.
கடத்தூர்
கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
அந்தியூர்
அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மல்ல நாய்க்கர். இவருடைய மகன் லிங்கேஷ்வரன் (வயது 22). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் கிருபா (20). பி.காம் படித்து உள்ளார். லிங்கேஷ்வரனும், கிருபாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், உறவினர்கள் என்பதாலும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நல்லாம்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கோபி
அதேபோல் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த வீரக்குமார் மகன் ரகு (22). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் முருகன்புதூரில் உள்ள கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ஈரோட்டை சேர்ந்த அன்புச்செல்வன் மகள் சங்கவி (20). பி.காம். சி.ஏ. படித்துள்ளார். ரகுவும், சங்கவியும் உறவினர்கள் என்பதால் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களுடைய காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே பவளமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி, 2 காதல் ஜோடிகளின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.