கோபியில்440 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


கோபியில்440 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

கோபியில் 440 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசாா் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம்பாளையம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேனை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பங்களாப்புதூரை சேர்ந்த ஸ்டாலின் குமார் (வயது 41) என்பதும், அவர் அந்தியூரில் வசிக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஸ்டாலின் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 440 கிலோ ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story