கோபியில்2 கடைகளில் உரம் விற்பனைக்கு தடைவேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை


கோபியில்2 கடைகளில் உரம் விற்பனைக்கு தடைவேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை
x

கோபியில் 2 கடைகளில் உரம் விற்பனைக்கு தடை விதித்து வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்

ஈரோடு

ஈரோடு மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கலைச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 2 தனியார் உர விற்பனை நிலையங்களில் விதிமுறை மீறல் நடந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளில் விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story