கோபியில் காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்
கோபியில் காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம் அடைந்தாா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் காளிமுத்து. அவருடைய மகன் மோகன்சிவா (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகள் வாணிஸ்ரீ (20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் மோகன்சிவாவுக்கும், வாணிஸ்ரீக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மோகன்சிவாவும், வாணிஸ்ரீயும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். பின்னர் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர். அதன்பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோபி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.