கோபியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
கோபியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு
கோபி நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் நவீன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் கோபி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை அந்த சிறுமி காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனா்.
Related Tags :
Next Story