கோபியில் மஞ்சப்பை பயன்படுத்துவதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


கோபியில் மஞ்சப்பை பயன்படுத்துவதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
ஈரோடு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மையம் சார்பில் கோபி வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில், மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

அதைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கலிங்கியத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், சமுதாய வளமை பயிற்றுநர்கள் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story