அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
x

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்டு 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது தொழிற்பிரிவுகளில் இன்னும் பயிற்சியாளர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக இருப்பதால் நேரடி சேர்க்கைக்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே பயிற்சியில் சேர விரும்புவோர் இந்நிலையத்திற்கு அனைத்து, அசல் கல்வி சான்றிதழ்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் (இருந்தால்), ஆதார் அட்டை, அனைத்து சான்றிதழ்களின் 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5) ஆகியவற்றுடன் வருகிற 30-ந்தேதிக்குள் இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை நெல்லை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனரும், முதல்வருமான அருள் தெரிவித்துள்ளார்.


Next Story