அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.18 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு பூமி பூஜை
எட்டயபுரத்தில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.18 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு பூமி பூஜை நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ2.18 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கட்டிடத்துக்கான பூமி பூஜை நடந்தது. கல்லூரி முதல்வர் பேபி லதா தலைமை தாங்கினார். கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் செயற் பொறியாளர் கதிரவன், கூட்டுறவு நூற்பாலை முன்னாள் தலைவர் உதயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், ஸ்ரீதர், எட்டயபுரம் பேரூராட்சிமன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வார்டுசெயலாளர் பிச்சை, அருள் சுந்தர், சின்னப்பர் மகளிர் அணி பொறுப்பாளர் முருக லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வெம்பூர் ஊராட்சி கோடாங்கிபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5½ லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மேலும் வீரப்பட்டி கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பேவர் பிளாக் சாலை, சிமெண்டு சாலை, விவசாய உலர்களம் உள்ளிட்ட பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.