கூடலூரில் போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது


கூடலூரில்  போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
x

கூடலூரில் போதை மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கூடலூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புதிய பஸ் நிலைய பொது கழிப்பிட வளாகம் அருகே மயக்கமான நிலையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கேரள மாநிலம் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியைச் சேர்ந்த அஜித் (வயது 19) என்பதும், டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை தரக்கூடிய 90 மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குமுளி அம்பாடி காலனியை சேர்ந்த கிறிஸ்டி (19) என்பவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு கொடுத்ததும் தெரியவந்தது.


Next Story