கூடலூரில்குப்பை கிடங்கில் தீ விபத்து


கூடலூரில்குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை நகரின் மையப் பகுதியில் உள்ள பெத்துக்குளம் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் குப்பைகள் இங்கு மலைபோல் குவிந்துள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அடிக்கடி சிலர் குப்பை கழிவுகளில் தீ வைத்து விடுவதால் குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனால் 8-வது வார்டு காந்திகிராமம், அழகாபுரி தெரு, கிராமச் சாவடி தெரு, காமாட்சி அம்மன் கோவில்தெரு ஆகிய பகுதி மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .மேலும் சுற்றுபுறச்சூழல் பாதிக்கப்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பெத்து குளம் குப்பைக்கிடங்கில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கம்பம் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Related Tags :
Next Story