கூடலூரில் மழையால் குண்டும், குழியுமான சாலை : சீரமைக்க வலியுறுத்தல்
கூடலூரில் மழையால் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தேனி
கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அகலமான வீதிகளில் தார்சாலையும், குறுகிய பகுதிகளில் பேவர்பிளாக் கற்கள் மூலம் சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கூலிக்காரன் பாலத்தில் இருந்து பொம்மஜ்ஜி அம்மன் கோவில் தெரு, கிராமச் சாவடி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story