கூடலூரில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
கூடலூரில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தேனி
கூடலூர் நகர பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் இருபக்கமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடு ரைஸ்மில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக மழை நீர் வெளியேற முடியாமல் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்களும் அச்சத்துடன் செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story