தேனியில்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் கவுரி தலைமை தாங்கினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆனந்த சேகுவேரா, இளைஞர் பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சிவாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அதானி குழுமத்துக்கு வழங்கிய நிலக்கரி சுரங்கம், விமான நிலங்களை மீட்க வேண்டும். அதானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story